தொளவேடு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

தொளவேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
தொளவேடு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

தொளவேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொளவேடு கிராமத்தில் டி.கே. கிருஷ்ணமூர்த்தி, எஸ். முரளிதரன் ஆகியோர் தலைமையில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவில் குறைந்தபட்ச பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த  25ம் தேதியன்று ஆலயத்தில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள்  நடத்தப்பட்டு பின்னர் மாதவரம் திரு ஐயங்கார் தலைமையில் கொண்ட புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு சுமார் 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் கோபுரம் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். 

பின்னர் அங்கு வந்திருந்த குறைந்த அளவிலே கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு கோவில் சார்பில் முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.முரளிதரன் கொண்ட குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com