புதிய கட்டுப்பாடுகள்: திருப்பூரில் கடைகள் அடைப்பு

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி பெரும்பாலான கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.
திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் சனிக்கிழமை அடைக்கப்பட்டுள்ள கடைகள்.
திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் சனிக்கிழமை அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

திருப்பூர்: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி பெரும்பாலான கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

தமிழக அரசு வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்டத்தில் கரோனா 3 ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி திருப்பூர் மாநகரில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் அதிகமாக கூட்டம் சேரும் இடங்களாக 33 இடங்கள் கண்டறியப்பட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி திருப்பூர் மாநகரில் மளிகை, தேநீர் விடுதிகள், உணவகங்கள், பாலகங்கள், மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கின. 

அதே வேளையில், பேன்சி கடைகள், வீடு கட்டுமானக் கடைகள், மின்சாதன கடைகள், ஜவுளி கடைகள், காதர் பேட்டையில் செயல்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட பின்னலாடை மொத்த, சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

திருப்பூர் பின்னலாடை மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் வழக்கம்போல் இயங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல, பல்லட் என்.ஜி.ஆர்.சாலை, தாராபுரத்தில் எம்.என்.பேட்டை, பெரியகடை வீதி, சின்னகடை வீதி, சர்ச் சாலை, ஜவுளிகடை வீதி, வசந்தா சாலை, உடுமலையில் கல்பனா சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை மற்றம் பசுபதி வீதி, விஓசி வீதி, கச்சேரி வீதி, ராஜேந்திர சாலை( காய்கறி சாலை) ஆகிய இடங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com