எஸ்.பி. வேலுமணியின் சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் ஆய்வு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். 

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். மேலும் அவரது சொத்துகள் குறித்த அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நேற்று சோதனை செய்ததுடன் அப்போது அங்கிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை செய்தனா்.

இந்நிலையில் நேற்று பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் லாக்கர்களையும் சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முழுமையான ஆய்வுக்குப்பின்னர் வேலுமணிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com