ஸ்ரீவில்லிபுத்தூரில் சோதனைகளை முடித்து  பாரதிபிரியா தலைமையில் காவல்துறையினர், பைகளில் ஆவணங்களை எடுத்துச் செல்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சோதனைகளை முடித்து  பாரதிபிரியா தலைமையில் காவல்துறையினர், பைகளில் ஆவணங்களை எடுத்துச் செல்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: பணிநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 6 மணி நேரம் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (52). இவர் தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை அலுவலராகவும் பொறுப்பு அதிகாரியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் இவர் மீது வந்துள்ள புகாரின் காரணமாக அங்கு பணிபுரியும் போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இவரது  பெயரிலும் இவரது மனைவி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்திருப்பதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்தப் புகாரின் அடிப்படையில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா மற்றும் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து கற்பக விநாயகர் கோயில் தெருவில் உள்ள ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் ஒரு மணி வரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது சோதனையின் முடிவில் அதிகாரிகள் கட்ட பைகளிலும் அட்டைப் பெட்டியில் வைத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,  ராஜேந்திரன் மீது மூன்று பிரிவுகளின  மீது வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை ஆறு மணி நேரம் சோதனை நடைபெற்றபோது ராஜேந்திரன் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரன் இந்த சோதனை, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com