இறப்புக்குப்பின் உடல் உறுப்புகளை கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 13) உடல் உறுப்பு கொடை நாளையொட்டி, முதல்வர் விடுத்துள்ள செய்தி:
உலக உடலுறுப்புக் கொடை நாளில், உடலுறுப்புக் கொடை தொடர்பான தவறான கருத்துகளை நீக்கி, நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை இறப்புக்குப்பின் கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம். நாம் எடுக்கும் ஒரு முடிவானது பலரது வாழ்வைப் புரட்டிப்போட்டுப் பெரிய மாற்றத்தை அவர் தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.