பெட்ரோல் மீதான வரி குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் தகவல்

பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், "பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும். இதனால், 1000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படும். ஆனால், உழைக்கும் மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு நிவாரணமாக அமையும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com