தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்: பட்ஜெட்

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்
தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் அவர் அறிவித்திருப்பதாவது, 

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம், வேலூர்,  திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com