அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்: நிதியமைச்சர்

தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 
அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்: நிதியமைச்சர்

தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

நிதியமைச்சர் தனது உரையில், தமிழக அரசின் அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும் எனத் தெரிவித்தார். 

மேலும், அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும். 

1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும். 

பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். 

பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com