இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் திண்டுக்கல்லில் பறிமுதல்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்ட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்ட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்.



திண்டுக்கல்:  இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

திண்டுக்கல் சோலைஹால் தெருவில் பிரதான மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மீன் சந்தையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கே.சிவராமபாண்டியன், மீன் வளத்துறை உதவி இயக்குநர் ஞானம் ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

பறிமுதல் செய்யப்பட்ட சுகாதாரமற்ற 500 கிலோ மீன்கள்.

அங்குள்ள 25 மீன் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஒரு கடையில் 500 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த மீன்களையும் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சம்மந்தப்பட்ட 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கி, தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்  கூறுகையில், நாட்டு மீன் இனங்களை ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழித்துவிடும் என்பதால், அந்த வகை மீன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை உண்பதால் மலட்டுத் தன்மை மற்றும் புற்றுநோய் ஏற்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com