
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.18 மற்றும் ஆக.19இல் நீலகிரி, கோவை, புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் ஆக.20இல் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.