மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாகச் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.98 அடியிலிருந்து 69 அடியாகச் சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாகச் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாகச் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.98 அடியிலிருந்து 69 அடியாகச் சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,171 கன அடியிலிருந்து 4379 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.84 டி.எம்.சி.யாக உள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com