திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைப்பு

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ரூ.1.20 கோடியில் 333 லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைப்பு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைப்பு


திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பெறும் நோக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு நிதி ரூ.1.20 கோடியில் 333 லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.எஸ்., கிவ் இந்தியா, ஜி.என்.கே..அறக்கட்டளை மற்றும் சேவியர் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் டென்மார்க் நாட்டில் இருந்து நேரடியாக உற்பத்தி இயந்திரம் ரூ.1.20 கோடியில் இறக்குமதி செய்து நிறுவப்பட்டுள்ளது.

இந்த மையம் மூலம் நிமிடத்திற்கு சுமார் 333 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 75 படுக்கைகளுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் அளிக்க முடியும். அதேபோல், இந்த மையம் மூலம் நாள்தோறும் 60 உருளைகளில் ஆக்ஸிஜன் நிரப்ப முடியும். ஏற்கெனவே இம்மருத்துவமனையில் ரூ.98 லட்சத்தில் தனியார் நிறுவன பங்களிப்பில் வழங்கிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கரோனா தொற்றினை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். அதோடு இம்மருத்துவமனைக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி பெறப்பட்டு தன்னிறைவு பெற்ற சிகிச்சை மையமாகவும் உருவாகி உள்ளதாக என அவர் தெரிவித்தார்.

இதில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியதர்ஷ்ணி, பொது மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் சாந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அரசி ஸ்ரீவத்ஸன், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன செயலாளர் ஸ்டீபன், ஜி.எஸ்.கே. அறக்கட்டளை தலைவர் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com