
சென்னை நாளைக் கொண்டாடும் மாநகராட்சி: பல்வேறு போட்டிகள் அறிவிப்பு
சென்னை: மெட்ராஸ் டே என்று கூறப்படும் சென்னை நாளைக் கொண்டாடும் வகையில் பல்வேறு போட்டிகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.
இது குறித்த விளம்பரங்களை சென்னை மாநகராட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஓவியப் போட்டி மற்றும் புகைப்படப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Hurrayyy!
— Greater Chennai Corporation (@chennaicorp) August 20, 2021
Greater Chennai Corporation celebrates #MadrasDay2021!
இது நம்ம சென்னை சிங்காரச் சென்னை!
மெட்ராஸ் தினத்தை கொண்டாட வாருங்கள்!#NammaChennaiSingaraChennai #ChennaiCorporation @mkstalin pic.twitter.com/2W18o2VhR2
போட்டி குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, மெட்ராஸ் தினத்தையொட்டி ஓவிய மற்றும் புகைப்பட போட்டி இரண்டு தினங்களுக்கு நடைபெறுகிறது.
இதையும் படிக்கலாமே.. கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்
அன்பார்ந்த சென்னை மக்களே
— Greater Chennai Corporation (@chennaicorp) August 20, 2021
மெட்ராஸ் தினத்தையொட்டி ஓவிய மற்றும் புகைப்பட போட்டி இரண்டு தினங்களுக்கு நடைபெறுகிறது.#சிங்காரச்சென்னை என்ற தலைப்பில் நீங்கள் வரைந்த ஓவியங்கள்/ எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள linkல் நாளை மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம்https://t.co/mpW733NPXU pic.twitter.com/R0ndpPTmGZ
சிங்காரச்சென்னை என்ற தலைப்பில் நீங்கள் வரைந்த ஓவியங்கள்/ எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள இணைப்பில் நாளை மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கான போட்டிகளில் குறிப்பிட்டுள்ள தேதியில் நீங்கள் பங்கு பெறலாம். pic.twitter.com/OBMvGAvxHg
— Greater Chennai Corporation (@chennaicorp) August 20, 2021
அது மட்டுமல்லாமல், ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. ஆர்வமுள்வர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.