கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்

எதிர்பாராதவிதமாக உடல் முழுவதும் தீ பரவி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்
கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்

புதுக்கோட்டையில் கராத்தே தகுதிப்பட்டை வழங்குவற்கான போட்டியின்போது, கைகளில் துணியைச் சுற்றி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஓடுகளை உடைத்து சாதனை செய்ய முற்பட்ட இளைஞர், எதிர்பாராதவிதமாக உடல் முழுவதும் தீ பரவி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அடப்பன்வயலில் கடந்த 14ஆம் தேதி புத்தாஸ் வீரக்கலை மன்றம் மற்றும் டேக் வாண்டோ கராத்தே அமைப்பு ஆகியவற்றின் சார்பில் சாதனையாளர்களுக்கு தகுதிப்பட்டை வழங்குவதற்கான போட்டிகள் நடைபெற்றன.

வாகனங்களை உடல் மீது ஏற்றுவது, கற்களை உடலில் வைத்து உடைப்பது உள்ளிட்ட சாகசங்களில் பலரும் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 19 வயது இளைஞர் தனது இரு கைகளிலும் துணியைச் சுற்றிக் கொண்டு பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டு சுற்றி நிற்போரின் கைகளில் உள்ள ஓடுகளை உடைக்கும் சாகசத்தில் ஈடுபட முயன்றார்.

அந்த சாகசத்தைச்செய்து கொண்டிருக்கும் போதே யாரும் எதிர்பாராத வகையில் அவரது உடலில் தீ பரவியது. 

இதனால் அலறித்துடித்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 35 சதவிகிதம் தான் தீக்காயம் இருப்பதால் உயிர் பிழைத்து வந்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இது கராத்தே நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணேஷ்நகர் காவல்நிலைய காவலர்கள் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com