***
கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்க சற்றுத் தாமதமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எவருக்கும் வாக்கு கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பேச்சுத் திறமையும், இனிமையும் அதிகரிக்கும். புதிய நிர்வாகிகளின் அணுகுமுறை உங்கள் கவனத்தை ஈர்க்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவது நல்லது. விவசாயிகளுக்கு கடன் பிரச்னைகள் தொந்தரவு தராது. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். உங்கள் திட்டங்கள் சற்று தாமதமாக நிறைவேறும். கலைத்துறையினர் அநாவசியமாக எவரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். புதிய ஒப்பந்தங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். பெண்மணிகளுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த சிக்கல்கள் சற்று குறையும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். மாணவமணிகள் படிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் ஈடுபடுவது உசிதமல்ல. வெளிநாட்டுத் தகவல் நன்மை தரும்.
பரிகாரம்: ராகு மற்றும் சனி பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 22, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.
***
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய பொருள்களின் சேர்க்கை நிகழும். உடலிலும், மனதிலும் உற்சாகம் ஏற்படும். சில காரியத் தடைகள் இருந்தாலும் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. விவசாயிகள் விவசாயத்தில் அமோகமான மகசூலை பெறுவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உங்கள் பொறுமையை சோதிக்கும் நிகழ்வுகள் ஏற்படும். பொறுமையுடன் இருந்து அனைத்தையும் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் பெருகும். பெண்மணிகளுக்கு கணவன் - மனைவி உறவு மேம்படும். குடும்பத்தில் உங்கள் கெளரவம் உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகளுக்கு முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். பெரியோர்களின் ஆசியுடன் நிதானமாகச் செயல்படுங்கள்.
பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது.
அனுகூலமான தினங்கள்: 23, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.