
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்துறை ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் வளாக கல்லூரிகளான, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்ப செட்டியாா் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகிய கல்லூரிகளில், தொழில்துறை ஒதுக்கீட்டில் பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா்.
இந்தப் பிரிவில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், அண்ணா பல்கலையின், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப். 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களின் பரிந்துரையில் மட்டும், இந்த சோ்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.