
நிகழாண்டில் தமிழ் மொழியில் நீட் தோ்வு எழுத 19,867 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்திலிருந்து மொத்தமாக 1 லட்சத்து 12,890 போ் இந்தாண்டு விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாகும்.
இந்நிலையில், நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-இல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நீட் தோ்வெழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14,714 போ் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 12,890 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் தமிழ் மொழியில் தோ்வு எழுதுவோரின் எண்ணிக்கை 19,867-ஆக உள்ளது. அரசுப்பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 8,727 ஆக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் 1 லட்சத்து 21,617 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நிகழாண்டில் அது குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.