
காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் 9வது தடுப்பூசி முகாம்
காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் 9வது தடுப்பூசி முகாமில் ரூ.4 லட்சம் மதிப்பில் 575 தடுப்பூசிகள் போடப்பட்டன.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், சிங்காரம்பாளையம் தொழில் கூட்டமைப்பினர், மேட்டுப்பாளையம் எஸ்.ஜி.கே.மருத்துவமனை, காரமடை செளமியா மருத்துவமனை ஆகியோர் இணைந்து கண்ணார்பாளையத்தில் 575 பொதுமக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பில் 3,000 பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. இதன்படி 9வது கரோனா தடுப்பூசி முகாம் காரமடை கண்ணம்பாளையத்தில் சனிக்கிழமை போடப்பட்டது.
இதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் 575 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்கு காரமடை ரோட்டரி சங்க தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயபிரபு, பொருளாளர் கே.என்.குருபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரோனா தடுப்பூசி போடுவதற்காக கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் வரிசையாக வந்து கரோனா தடுப்பூசிகளை போட்டு சென்றனர். இதில் திட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.