ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மேற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மேற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கூட்டம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோமதி சங்கர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

பின்னர் தமிழ்நாடு வணிகர்கள்  கூட்டமைப்பின் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம்  பேசியதாவது:

வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். சுற்றுலாத்  தளமான குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடையை உடனடியாக  நீக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சுமார் 2 லட்சம் மேற்பட்ட தொழிலாளர்கள் வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர் அதை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சி என அனைத்துப் பகுதிகளும் சீரான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை அளிக்க உள்ளதாகவும்,

கரோனா காலகட்டங்களில் உயிரை துச்சமென மதித்து சேவை செய்து உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திமுகவின் 100 நாள் ஆட்சி பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சியாக உள்ளதாகவும் - வரியில்லாத பட்ஜெட் டை வழங்கியுள்ளதற்கு வரவேற்பதாகவும் வியாபாரிகள் பெற்றுள்ள கடனை செலுத்த டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் வேண்டும் எனவும்,

தடை காலங்களில் வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளை எந்த நிபந்தனையும் இல்லாமல் திரும்பப்பெற முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளோம் - மாநிலம் முழுவதும் நான்கு துறைகள் மூலம் அச்சுறுத்தப்படுகிறோம். காவல்துறை வியாபாரிகளை கடுமையாக அச்சுறுத்தி  வருகிறது. வியாபாரிகளை ஒரு துறை அதிகாரிகளைக் வைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விரைவில் ஆட்சி மன்றக் குழு கூட்டி போராட்ட தேதி அறிவிக்கப்படும். சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பதை அரசு அமல்படுத்தக்கூடாது. ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com