தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்


மதுரை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றி பாதிப்பு இல்லை.

11 நாடுகளில் இருந்து வந்த தமிழகம் வந்த 477 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முதல் தவணை 71 சதவீதம் பேர் செலுத்திக் கொண்ட நிலையில், இரண்டாவது தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், அனைவரும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டால் ஊரடங்கு தேவைப்படாது  என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com