
அதிமுகவின் உள்கட்சித் தோ்தலில் ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனா்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு டிசம்பா் 7-இல் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தோ்தல் ஆணையா்களாக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆனால், இரு பதவிகளுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இன்று மனு தாக்கல்: ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...