சங்ககிரி வட்டத்தில் 58.2 மி.மீ. மழை: நிரம்பிவரும் ஏரிகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 
அரசிராமணி, குள்ளம்பட்டியில் தரை பாலத்திற்கு மேலே செல்லும் மழை நீர்
அரசிராமணி, குள்ளம்பட்டியில் தரை பாலத்திற்கு மேலே செல்லும் மழை நீர்

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

சங்ககிரி வட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி முதல் 7 மணி வரை திடீரென இடியுடன் கூடிய 58.2 மில்லி மீட்டர் கனமழை பெய்தது. கனமழையை அடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் உள்ள ஏரிகள், குட்டைகள், கத்தேரியில் உள்ள புளியங்குளம் ஏரி நிரம்பி வருகின்றன.

மோரூர் சின்ன, பெரிய ஏரிகளுக்கு மழை நீர் அதிகளவில் செல்கின்றன. தேவூர் அருகே உள்ள அரசிராமணி பிட் 1 கிராமத்திற்குள்பட்ட குள்ளம்பட்டி பகுதியில் உள்ள சரபங்கா நதி நீர் அதிகரித்து தரைவழிபாலத்திற்கு மேல் செல்கின்றன அதனையடுத்து அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கனமழையை அடுத்த சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மதுரைவீரன் மனைவி தேவகி என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சங்ககிரி வருவாய்த்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி வட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகள், சேதமடைந்துள்ள வீடுகள் குறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தகவல்களை சேகரித்து  வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com