

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள மேஜர் நாகேஷ் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி செளத்ரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் சூலூருக்கு கொண்டு சென்று ராணுவ விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.