ஆத்தூர் அருகே வடகுமரை ஊராட்சியில் போலீசார் குவிப்பு 

ஆத்தூர் அருகே தலைவாசல் ஒன்றியத்திற்கு உள்பட்ட வடகுமரை ஊராட்சியில் புதன்கிழமை காலை 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 
ஆத்தூர் அருகே வடகுமரை ஊராட்சியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்
ஆத்தூர் அருகே வடகுமரை ஊராட்சியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே தலைவாசல் ஒன்றியத்திற்கு உள்பட்ட வடகுமரை ஊராட்சியில் புதன்கிழமை காலை 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

ஆத்தூர் தலைவாசல் அருகே வடகுமரை ஊராட்சியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று இன்று காலை அதிகாரிகள் அவர்களுடைய அறிவிப்பு பலகை ஒட்டுவதற்காக வரும்பொழுது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் இந்த கோவில் பல ஆண்டுகளாக எங்களுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்றும் அதனால் நாங்கள் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் கூறிவருகின்றனர்.

இதனையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் நாங்கள் அறிவு பலகை ஒட்டி விட்டு செல்வோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்கள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

அதேபோல இன்னொரு தரப்பினர் நாங்கள் கோயிலுக்கு செல்வோம் என்று கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com