பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு: டிசம்பருக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

திருநெல்வேலியில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்பு என்பது இழப்பு தான். மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்ளும் போது பள்ளிக் கட்டடங்களை நன்கு ஆய்வு செய்ய வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியுள்ளேன். சம்பந்தப்பட்ட பள்ளியில் அடித்தளம் இல்லாமல் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் பள்ளியில் இடம் இல்லாத நிலையில் வாடகைக்கு இடம் தோ்வு செய்யவும் வலியுறுத்திப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் நிலை குறித்து வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com