
கோப்புப் படம்
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு முதல்வரின் காப்பீடு திட்ட ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ரூ.1.20 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
படிக்க | சிறுபான்மை மக்களுக்கான அரசு திமுக: கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மருத்துவ காப்பீட்டிற்கான தவணைத் தொகையாக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.1,248.29 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் என்ற முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டமானது, 51 வகையான நோய்களுக்கு, 5 லட்ச ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற வழிவகை செய்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...