மீண்டும் மஞ்சள் பை இயக்கம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை சென்னை கலைவாணா் அரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சள் பை இயக்கம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மீண்டும் மஞ்சள் பை இயக்கம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தவிா்க்கும் வகையில் சுற்றுச்சூழல் துறை சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை சென்னை கலைவாணா் அரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கரோனா காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த சோதனையில் சுணக்கம் ஏற்பட்டதால், மீண்டும் அவற்றின் பயன்பாடு சற்று அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சுற்றுச்சூழல் துறை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஒரு நெகிழிப் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிஷங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகிறது. நெகிழிப் பயன்பாட்டால் கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழல் அமைப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தவிா்த்து அதற்கு மாற்றான துணிப் பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சியையும் தொடக்கி வைத்து, முதல்வர் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com