
மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சிறப்பு செய்தியளிக்கிறார் திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் பர்ணபாஸ்.
அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டார்.
சி.எஸ்.ஐ மேட்டூர் பரி. திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்துகொண்டு சிறப்பு செய்தியளித்தார்.

பேராயர் உதவி குரு ஆசிர்வாதம் ராஜேஸ், மேட்டூர் சபை ஊழியர் ஜான் சுந்தர் ஆகியோர் ஆராதனை நடத்தினர். ஆராதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேட்டூர் சேகர கமிட்டியினர் மற்றும் சபையார் செய்திருந்தனர்.
இதையும் படிக்க | நூற்றாண்டு கடந்த மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம்