ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்


சென்னை: பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியின் பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா். 

என்ன மோசடி?


விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நிா்வாகி விஜயநல்லதம்பி ஆவின் மேலாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றிவிட்டாா் என ரவீந்திரன் என்பவா் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அதே போன்று விஜயநல்லதம்பி அளித்தப் புகாரில், வேலை வாங்கித்தருவதற்காக ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா். அதன் பேரில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் நவ. 15 இல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே ராஜேந்திரபாஜாஜி தலைமறைவானாா். அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் நியமித்தாா். கடந்த சில நாள்களாக அவா் இருக்குமிடம் தெரியாமல் தனிப்படையினர் திணறி வந்தனா்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி ஓசூா், பெங்களூரு பகுதிகளில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கூடுதலாக 2 தனிப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தெரிவித்தாா். ராஜேந்திரபாலாஜியிடம் நெருக்கமாக இருந்த விருதுநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் பலரது கைப்பேசிகளை காவலர்கள் கண்காணித்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com