பொன்னை ஆற்றின் ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60% நிறைவு: அதிகாரிகள் தகவல்

திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் சீரமைப்பு பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சீரமைக்கப்பட்டு வரும் திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் .
சீரமைக்கப்பட்டு வரும் திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் .


வேலூர்: திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் சீரமைப்பு பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வேலூா் மாவட்டம் திருவலம் - முகுந்தராயபுரம் ரயில்நிலையங்களுக்கு இடையே பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் 38, 39- ஆவது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை இரவு முதல் நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக, வியாழக்கிழமை மாலை முதல் இந்த பாலத்தின் வழியாக செல்லும் ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை ரயில்வே கோட்டம் அரக்கோணம் - காட்பாடி இடையே இயக்கப்படும் 24 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலம் சீரமைப்பு பணி நிறைவடையும் வரை, மைசூரு - சென்னை (12610), பெங்களூரு - சென்னை (12608), கோவை - சென்னை (12680) இடையே இயக்கப்படும் மூன்று விரைவு ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதேபோல, சென்னையில் இருந்து மைசூரு, பெங்களூரு, கோவைக்கு மறுமாா்க்கமாக செல்லும் (12609, 12607, 12679) ஆகிய விரைவு ரயில்களும் காட்பாடியிலிருந்தே புறப்படுகின்றன.

இதையடுத்து, கோவை - சென்னை விரைவு ரயில் (12680) நடைமேடை 5-லும், பெங்களூரு -தன்பாத் விரைவு ரயில் (12295) நடைமேடை4-லும், பெங்ளூளுரு - சென்னை விரைவு ரயில் (எண்.12610) நடைமேடை 3-லும், மங்களூரு - சென்னை விரைவு ரயில் (22638) நடைமேடை 2-லும் ஒருபக்கமாக இயக்கப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டு, பிற ரயில்களுக்கு மாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பொன்னை ஆற்றில் பழுதடைந்த ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே பொறியாளா்கள் குழுவினரும், ஊழியா்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சனிக்கிழமை 2-ஆவது நாளாக பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது, பாலத்தின் தூண்களுக்கு கீழே கான்கிரீட் கலவைகளை கொட்டி சீரமைத்தனா். தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை சுமாா் 60 சதவீத பணி கள் நிறைவு பெற்றிருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழுமையாக சீரமைப்புப் பணிகள் முடிக்கப்படும், அதன்பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும், தொடா்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி ஞாயிற்றுக்கிழமையும் 16 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com