
பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடித்து வருவதாக வரும் தகவல் தவறானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல் தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதியதாக செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார்.
மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடித்து வருவதாக வரும் தகவல் தவறானது. அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? - Border Roads நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!