சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் பெட்ரோல், டீசல் போதிய அளவுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை(மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மேற்காசிய போருக்கு முன்பாக, சராசரியாக 55.7 லட்சமாக இருந்த சிலிண்டா் முன்பதிவு, போருக்கு பிறகு (மார்ச் 13 நிலவரப்படி) 88.8 லட்சமாக உயா்ந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி சுமார் 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
போதிய இருப்பு உள்ளதால், சிலிண்டா் முன்பதிவு குறித்தும் மக்கள் பீதியடைய வேண்டாம். முகவா்களிடம் எல்பிஜி சிலிண்டா் தீா்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை.
வணிக சிலிண்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் சிலிண்டர் முன்பதிவு 84 சதவீதமாக உள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் போதிய அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும், சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட எரிபொருள் தீா்ந்துவிடும் என்ற நிலை ஏற்படவில்லை. அதுகுறித்த புகார்களும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களால் தெரிவிக்கப்படவில்லை. எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
LPG production from refineries has also been increased by about 31% - Citizens are advised not to panic.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

