எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளது.
இது குறித்து, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறையின் சந்தைப்படுத்துதல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவின் இணைச் செயலர் சுஜாதா சர்மா தில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சத்திப்பில் பேசியதாவது : “எல்பிஜி விநியோகம் நடப்பு உலக அரசியல் சூழலால் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பல்கள் பல வரிசைக்கட்டி நிற்கின்றன. எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் எரிவாயு காலி என்ற நிலைமை ஏற்படவில்லை.
வாடிக்கையாளர்கள் அச்சத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்ததை திங்கள்கிழமை(மார்ச் 23) பார்க்க முடிந்தது. ஆனால், சிலிண்டர் விநியோகம் இயல்பாக நடைபெற்றது. போதுமான இருப்பும் உள்ளது. போதுமான பெட்ரோல், டீசல் விநியோகமும் நடைபெறுகிறது.
அனைத்து உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) விநியோகமும் நூறு சதவீதம் மேற்கண்ட வாடிக்கையாளர்களுக்கு நடைபெற்று வருகிறது.
அனைத்து சில்லறை விநியோக நிறுவனங்களும் இயல்பாகச் செயல்படுகின்றன. நமது எரிபொருள் நிலையங்களில் போதுமான பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது.
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் (பிஎன்ஜிஆர்பி) அனைத்து நகர எரிவாயு விநியோக (சிஜிடி) உரிமையாளர்களுக்கும் திங்கள்கிழமை(மார் 23) ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், தங்கும் வசதியுடன் இயங்கும் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், கூட்டு சமுதாய அடுப்பணைகள், அங்கன்வாடி அடுப்பணைகள் உள்பட முக்கிய இடங்களுக்கு அருகாமையில் உரிய பிஎன்ஜி எரிவாயு குழாய் வசதி உள்கட்டமைப்பு இருப்பின், அவர்கள் பிஎன்ஜி இணைப்பு வேண்டி விண்ணப்பித்த ஐந்து நாள்களுக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Summary
normal operation on all the retail outlets. We have sufficient petrol and diesel available at our fuel stations. Please don't believe in rumours and avoid panic buying says Sujata Sharma, Joint Secretary (Marketing & Oil Refinery), Ministry of Petroleum & Natural Gas
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; இந்தியாவை பாதிக்குமா? - மத்திய அரசு விளக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


