மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ்! 297 வாக்குறுதிகள் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

News image

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

யூடியூப் / அதிமுக

Updated On :24 மார்ச் 2026, 11:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார்.

ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 28 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா.

7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவை அதிமுக கொண்டுவந்தவை.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சி செய்துவந்த திமுகவை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி.

மகளிக்கு மாதம் ரூ. 2000 ஊக்கத் தொகை

5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்

வீடற்ற குடும்பங்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயில 1% இடஒதுக்கீடு.

ராணுவத்தில் உயிர்நீத்த, ஊனமுற்ற வீரர், வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியில் முன்னுரிமை.

ஊரக வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.

வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

தீபாவளிக்கு விலையில்லா வேட்டி, சேலை, பொங்கலுக்கு ரூ. 1,000.

மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்.

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும்.

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது வீரர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

பூசாரிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

தெரு நாய்கள், மாடுகளுக்கு விலங்குகள் நலக் காப்பகம் அமைக்கப்படும்.

தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.

நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பள்ளி சீருடைகள், விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.

கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் தொடரும்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு தனி பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் வீடு கட்டிக்கொள்ள குடியிருப்பு மனைகள் தரப்படும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.

அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் இலவச வைஃபை வசதி.

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவுக் கூடத்தோடு சேர்ந்த பசுமை வீடுகள்.

அறநிலையத் துறை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.