தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

தவெக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறித்து...

News image

தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்! - படம்: தவெக ஐடி விங்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:58 am

தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப். 16) வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், அந்தந்த பகுதி சார்ந்த மக்களுக்கான செயல் திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (ஏப். 16) நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக மக்களுக்கான தவெகவின் முழு தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டுள்ளார்.

தவெக தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாரயணனிடம், தவெக தலைவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியரிடம் வழங்கினார்.

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி, மீனவர், நெசவாளர் உள்ளிட்டோரிடமும் தவெக தேர்தல் அறிக்கையை விஜய் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

திருக்குறளில் சொன்னதுபோல அறம், பொருள், இன்பத்தில் அடிப்படையில் தேர்தல் அறிக்கை.

திமுகவும், மற்றும் பலரும் ஒன்னுதான் என்று நாம் கூறினோம். அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். ஒருவர் 10 ஆயிரம் கொடுத்தால் , மற்றொருவர் ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் தருகிறார்கள். இருவரும் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2000 கொடுக்கிறார்கள்.

இவர்கள், ஒரு குடையில் கீழ் இருக்கும் கொள்கைக் கூட்டம்தான். இந்த ஊழல் கூட்டம்போல ஏமாற்ற மாட்டோம். நமக்கு மக்கள்தான் முக்கியம். ஆட்சிக்கு வந்தபிறகு சொல்லாததையும் செய்வோம்” என்றார்.

Summary

Tamilaga Vettri Kazhagam President Vijay released the party's election manifesto today (April 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.