சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டதாகவும், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மார்ச் 25 ஆம் தேதி மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய அவர், இன்று சேலத்தில் நிறைவு செய்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோ பதிவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவை வணங்கி எனதருமை தமிழ்நாட்டு மக்களே.. வாக்குரிமை என்பது நம்முடைய தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.
இன்று ஒரேயொரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக அடைக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஐந்தாண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
உயர்கல்வித்துறையை சீரழிந்து சந்து பொந்துகளில் எல்லாம், கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்று மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய இந்த அராஜக குடும்ப ஆட்சியை அகற்ற உங்களின் வாக்குகள் தேவை; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகளை மீட்டெடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு, அம்மா உணவகம், அம்மா மினி கிளிக் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அதிமுக அரசு நிறைவேற்றியது.
இந்த மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும், சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம், வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க இருக்கின்றோம். அதுபோல, தமிழ்நாடு இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார் பழனிசாமி.
Summary
Opposition Leader Edappadi Palaniswami has released a video stating that law and order has completely collapsed and that the time has come to put an end to dynastic rule.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

