40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மேக்கேதாட்டு விவகாரத்தில் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பது ஏன்? - மாணிக்கம் தாகூர் கேள்வி

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மௌனமாக இருப்பது ஏன்? என மாணிக்கம் தாகூரின் கேள்வி குறித்து...

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 10:01 am IST

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்?

இப்போதும் முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமைக்காக உறுதியான நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனா "கனெக்டிங் கால்" பேசுற" பேசுற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி … எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல?

பிரதமர் நரேந்தி மோடி உடனடியாக மேக்கேதாட்டு முன்மொழி திட்டத்தை ரத்து செய்து, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பங்கை பாதுகாக்க வேண்டும்.

அதனை முதல்வரின் கடிதம் தெளிவாக சொல்கிறது.

இந்த முன்மொழித் திட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு்கும் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது. மேலும், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

இது அரசியல் விவகாரம் இல்ல.

இது நம்ம நீர்…

நம்ம விவசாயிகள்…

நம்ம தமிழ்நாடு உரிமை.

தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது.

முதல்வர் கடிதத்துக்கு முழுமையான ஆதரவு. தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றாக நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Why are Opposition leader Udhayanidhi and Ex CM Edappadi Palaniswami remaining silent mode on the Mekedatu issue?...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.