ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

News image

பினராயி விஜயன் - X

Updated On :27 மே 2026, 9:15 am IST

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட10 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றது.

சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீரென இந்தச் சோதனை நடைபெற்று வருகின்றது.

மேலும், கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பினராயி விஜயன் முதல்வர் பதவியை இழந்தார். தற்போது காங்கிரஸின் வி.டி. சதீசன் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

Summary

ED raids 10 locations, including Pinarayi Vijayan's residence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.