உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்! இன்று மாலை 4 மணிக்கு பிரதமரைச் சந்திக்கிறார்!

முதல்வர் விஜய் தில்லிக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம்...

Chief Minister C. Joseph Vijay

முதல்வர் சி. ஜோசப் விஜய். - கோப்புப் படம்

Published On :

தமிழக முதல்வரான பிறகு சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், 2 நாள் பயணமாக இன்று தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 4 மணியளவில் சந்திக்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் நேரில் சென்று கோரிக்கை வைக்கவுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Chief Minister Vijay Departs for Delhi to meet pm modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.