தமிழகத்தில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், எந்தவிதமான சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் வரக்கூடாது என தவெகவின் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வழக்குரைஞர் குழுவுடன் சந்தித்தார். நாளை மறுநாள் தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா பேசியதாவது,
வாக்கு எண்ணிக்கை அன்று எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் வரக்கூடாது எனத் தமிழ்நாடு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்களைச் சந்தித்து மனு அளித்து உள்ளோம். தவெக துறைமுகம் வேட்பாளர் அமைச்சர் சேகர்பாபு அவரது செல்போன் வைத்துத் தாக்க முயன்றார். அதன் காணொலி உள்ளது. அதைக் கொடுத்துள்ளோம். சைதாப்பேட்டையில் தவெக வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளது.
தோல்வி பயத்தில் திமுக எங்களை அச்சுறுத்துகிறது எனவும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் யார் முகவர் ஆக உள்ளார்களோ அவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளோம். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் குறிப்பாக லயோலா கல்லூரி வெளியே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த கட்சி நிர்வாகிகளும் இருக்கக்கூடாது. ஏன் என்றால் அது பொதுமக்களுக்குத் தான் பிரச்னை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை உள்ளே இருக்கும் தகவலை வெளியே வந்து திமுகவினர் சொல்லி கலவரத்தை ஏற்படுத்த பார்ப்பார்கள். நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் எனவும் ஒவ்வொரு ரவுண்ட் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் கூற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தாபல் வாக்குகள் லெஜர் காப்பி இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து உள்ளோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தவெக அலுவலகத்தை எரித்த உண்மையான நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா வாக்கு எண்ணும் மையத்தில் மாநில ஊழியர்களும் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வுகள் மூலம் அவர்கள் இப்படித் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லை ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள தேர்தல் அலுவலர்கள் தான் பணியில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
Summary
With the vote counting scheduled to take place in Tamil Nadu on May 4th, TVK's Adhav Arjuna has stated that no law and order issues should arise.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 432 மேற்பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


