பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடபாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
''பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், சகோதரர் அண்னாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் அண்ணாமலை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை தலைவராக நியமித்தது. நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, மாநில பாஜகவின் உள்கட்சி பூசல்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை செயலாளர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மேலிடத்தில் அழைப்பின்பேரில் நயினார் நாகேந்திரனும் தில்லுக்குச் சென்றுள்ளார்.
Summary
Edappadi palanisamy Extends Birthday Wishes to BJP Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை சந்திப்பு: நயினாருக்கு அழைப்புவிடுத்த தில்லி பாஜக தலைமை!

அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை!

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதிமுக கூட்டத்தில் 5 உறுப்பினர்கள் மிஸ்ஸிங்! வாழ்த்து சொன்ன பழனிசாமி! பின்னணி என்ன?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



