2029 மக்களவை தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார், பாஜக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கரூர் அரசு மருத்துவமனை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சம்பவம் நடந்தபோதே சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து ஆறுதல் தெரிவித்திருக்கலாம்.
2029-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் பதவியேற்பார். எந்தச் சூழ்நிலையிலும் பா.ஜ.க. ஆளும் கட்சியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது.
திருமாவளவன் கூறும் கருத்துகள், "பாலுக்கு பூனை காவல்" என்பதுபோல் உள்ளன. கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததும், தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். திருமாவளவன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு செய்வது தவறல்ல. ஆனால், குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துவதும், அவர்களை கட்டாயப்படுத்தி 'ரீல்ஸ்' எடுப்பதும் ஏற்க முடியாதது. இந்த ஆட்சியைக் குறைக் கூறவில்லை. குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசுக்கு அவகாசம் அளித்து செயல்பாடுகளை கண்காணிப்பது அவர்களது கடமையாகும்.
ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, "அதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.
Nainar Nagendran has stated that Modi will become Prime Minister again in the 2029 Lok Sabha elections and that no one can stop the BJP from coming to power.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 4 கோடி பணம் பறிமுதல்! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK




