கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

News image

முதல்வர் விஜய் / பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - X

Updated On :15 ஜூன் 2026, 10:18 pm IST

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் இன்று பிகாரைச் சேர்ந்த நபரால் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபற்றி தமிழக முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் விதமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, “கடந்த மாதம் 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதவியேற்ற முதல்வர் விஜய் வெற்றிகரமாக ஆட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், 15 போக்ஸோ குற்றங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த கால தி.மு.க ஆட்சியில் பாலியல் குற்றங்கள் 125 சதவீதம் அதிகரித்திருந்தது. தவெக ஆட்சியில் இப்போதே அது 100 சதவீதத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் 207 குற்றச் சம்பவங்களும் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடைபெற்றுள்ளன. கஞ்சா எல்லா இடங்களிலும் புழங்கிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தமிழக வெற்றிக் கழக முதல்வர் ப்ரோ. திரு. ஜோசப் விஜய் ப்ரோ. இந்த 3 வயது குழந்தைக்கு யார் பதில் சொல்வார்கள். பெரம்பூரில் 7 வயது பள்ளி மாணவிக்கு யார் பதில் சொல்வார்கள். சொல்லுங்கள் விஜய் ப்ரோ.

உங்கள் எம்.எல்.ஏ. நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார். யாருடைய ஆட்சியில் இதெல்லாம் நடைபெறுகிறது. மக்களைப் பற்றி உங்களுக்கு கவலை இருந்தால் சட்டம் ஒழுங்கு சரி செய்யப்பட்டிருக்குமா இல்லையா?

இந்த முதல்வர் முதுகெலும்பில்லாதவர். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத இவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். ஆட்சியமைத்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது என பத்திரிகையாளர்கள் கேட்கலாம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு யார் பாதுகாப்பு?

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும். பிரச்னைகளை பத்திரிகையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அக்கறையுடன் அரசு செயல்படவேண்டும்” என்று பேசினார்.

Summary

BJP leader Nainar Nagendran has alleged that sexual crimes have increased under the TVK government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.