கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாள்களில் 40 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, உலகின் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மாற்றுப் பாதைகள் இல்லாத சூழலில், இராக், கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதன் தாக்கம் எதிரொலியாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலா் வரை உயா்ந்த நிலையில், இன்று சுமாா் 103 டாலருக்கு வா்த்தகமாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாள்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த பிப். 27-இல், ஒரு பேரல் 73 டாலர் ஆக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை(மார்ச் 14) ஒரு பேரல் சுமாா் 103 டாலருக்கு வா்த்தகமாகி வருகிறது.
கடந்த இரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலையேற்றம் 30 டாலர் அதிகரித்துள்ளதையும், மிகக் குறைந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 41.1 சதவீதம் உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
ஹோா்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து முடக்கம் நீடித்தால், இனி வரும் நாள்களில் அதிலும் குறிப்பாக வரும் வாரத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆசியா எங்கிலும் எண்ணெய் விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் விலையேற்றத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
Summary
Crude oil prices surge over 40% in 15 days since US-Israel-Iran conflict began
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது

கச்சா எண்ணெய் 100 டாலர்! இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

