அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 20% சரிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது போர் தொடுத்ததன் விளைவாக, உலகின் கடல்வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் எதிரொலியாக இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் உடனடியாகவே பாதிப்பை எதிர்கொண்டன.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனாலும், எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்தது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் முதல்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தது. ஜி7 நாடுகள் தங்களின் அவசர கால கையிருப்பில் இருக்கும் எண்ணெய்களை வெளியிட்டதால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம் செய்யப்படும் என்றும், பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய்யின் விலை 15 சதவிகிதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணியளவில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 13 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்து, ஒரு பீப்பாய் 94.94 டாலராக வர்த்தகமானது. இதற்கிடையில், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 14.60 சதவிகிதம் டாலர்கள் விலை சரிந்து ஒரு பீப்பாய் 96.46 டாலராகக் குறைந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு முன்னதாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 62 முதல் 65 டாலர் வரை வர்த்தகமாகி வந்தது. போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால், பீப்பாய்க்கு 119 டாலர் என்ற உச்சத்தை எட்டிய நிலையில், மீண்டும் 100 டாலருக்கு கீழே இறங்கி வர்த்தகமாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க... அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி! - ஈரான்
Summary
Oil prices plunged by almost 15% after Donald Trump held off on his threat to bomb Iran into the stone ages on Tuesday night, and Iran’s foreign minister said passage through the strait of Hormuz would be allowed for the next two weeks under the management of its military.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்
போரால் சரியும் பொருளாதாரம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

