தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: எக்ஸ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 4:13 am

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடியும் தறுவாயில் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்.

நான் இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரானியர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஈரானின் திட்டங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் இருந்தோம். ஈரானின் அணுசக்தித் திறன்களைச் சிதைப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன். ஈரானிடம் அணுசக்தித் திறன் இப்போது இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை ‘சார்’ என்றுதான் அழைத்துக் கொண்டிருப்போம். அதனை யாரும் விரும்ப மாட்டார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இஸ்லாமாபாத் செல்வதற்கு நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்தின் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப் படாமல் பேச்சு தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விதித்துள்ள முக்கிய நிபந்தனையாக இருந்தாலும், அமெரிக்க தாக்குதலுக்கு சுமார் ரூ. 25 லட்சம் கோடி வரை இழப்பீடாக ஈரான் கோருவதாகவும் இதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

US President Donald Trump on Wednesday said the war with Iran is “very close to being over,” while asserting that the United States is “not done” with its military campaign, as Washington prepares for a second round of talks with Tehran amid continuing tensions in West Asia alongside parallel diplomatic efforts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.