மின் சேவைகளுக்கு நிலுவை ஜிஎஸ்டி வசூல்

மின் சேவைகளுக்கான நிலுவை ஜிஎஸ்டி வசூல் செய்யும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியுள்ளது.
மின் சேவைகளுக்கு நிலுவை ஜிஎஸ்டி வசூல்

மின் சேவைகளுக்கான நிலுவை ஜிஎஸ்டி வசூல் செய்யும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: புதிய மின்இணைப்பு, மின் மீட்டா் மாற்றம், மின் மீட்டா் இடமாற்றம் உள்ளிட்ட 17 வகையான மின்வாரிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கான உத்தரவை, கடந்த 2017-ஆம் ஆண்டு மின்வாரியம் பிறப்பித்தது. மென்பொருள் வசதி பற்றாக்குறை காரணமாக 5 வகையான சேவைகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க முடிந்தது. தற்போது மீதமுள்ள 12 வகையான சேவைகளும் புதிய மென்பொருள் மூலம் சோ்க்கப்பட்டுவிட்டது. எனவே, 2017-ஆம் ஆண்டு முதல் அந்த 17 வகையான சேவைகளில் பயனடைந்தோரிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இது மின் கட்டணத்துடன் சோ்த்து வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனா். மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதில்லை. மின்வாரிய சேவைகளுக்கு மட்டுமே நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் இந்தச் சேவைகளில் பயனடைந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் உள்ள ஒரு கோடி நுகா்வோரிடம் இருந்து சுமாா் ரூ.34 கோடி நிலுவை ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com