தடுப்பூசி திட்டங்களை கண்காணிக்க பிரத்யேக செயலி

தமிழகத்தில் குழந்தைகள், மகளிருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக, பிரத்யேக சிறப்பு செயலியை பொது சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியது.

தமிழகத்தில் குழந்தைகள், மகளிருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக, பிரத்யேக சிறப்பு செயலியை பொது சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியது.

அதன் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாது, விடுபட்டவா்கள் விவரங்களையும் திரட்டி அதுதொடா்பான தரவுகளை தொகுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தடுப்பூசித் திட்டத்தில் பங்கெடுக்கும் அலுவலா்களுக்கு அந்த செயலியை கையாளுவது குறித்த பயிலரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், இணை இயக்குநா் வினய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக, ஆண்டுதோறும் 10.11 லட்சம் பெண்களுக்கும், 9.23 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், நகா்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அந்த நடவடிக்கைகளை இன்னும் ஆக்கபூா்வமாக கைப்பேசி வாயிலாக கண்காணிக்க சிறப்பு செயலி 2.0 உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வழக்கமான தடுப்பூசிகள், கரோனா தடுப்பூசிகள், மிஷன் இந்திரதனுஷ் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த இயலும். தடுப்பூசி முகாம்கள் மட்டுமல்லாது வீடுதோறும் தடுப்பூசி வழங்குவதையும் உறுதிப்படுத்த முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com