பழைய கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு: விஜயகாந்த் வலியுறுத்தல்

பழைய கட்டடங்களின் உறுதித்தன்மையை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

பழைய கட்டடங்களின் உறுதித்தன்மையை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், மேம்பாலங்கள், அணைகள் இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகிறது. உரிய நிதியை ஒதுக்காமல், தரமற்ற கட்டடங்களைக் கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தி இடியும் நிலையில் உள்ளவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com