
கோப்புப் படம்.
சென்னையில் நாளை(டிச.31) இரவு அத்தியாவசிய வாகனங்களுக்கு தடையில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் கரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க- யு19 ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
இந்நிலையில், சென்னை காவல்துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் அனைத்து வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...